இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..!

இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..!

இரண்டாவது நாளாக தொடரும் ஏற்றம்..!

"பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய.." என மெர்சல் விஜய் போல சென்செக்ஸில் சந்தை தீ பற்றி எரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1921 புள்ளிகள் அதிகரித்து ஒரே நாளில் சென்செக்ஸ் 38,014 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை 36,214 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி மாலை வர்த்தக நேர முடிவில் 38,014 புள்ளிகளுக்கு நிறைவு அடைந்தது, இன்றும் அதே போல ஒரு வான வேடிக்கை நடக்கும் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இன்று காலை சென்செக்ஸ் 38,844 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியான 38,014 புள்ளிகளில் இருந்து நேரடியாக 830 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இப்போது வரை சந்தை சுமாராக 1,000 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39,014 புள்ளிகள் தொட்டு மேல் நோக்கி வர்த்தகமாகி வருகிறது.