அண்ணனுக்கு இல்லாட்டி பரவாயில்லை.. இவரை நிறுத்துங்க..

அண்ணனுக்கு இல்லாட்டி பரவாயில்லை.. இவரை நிறுத்துங்க..

அண்ணனுக்கு இல்லாட்டி பரவாயில்லை.. இவரை நிறுத்துங்க..

காங்கிரசுக்கு நாங்குநேரியை திமுக ஒதுக்கியதுமே தொண்டர்கள் குஷியாகிவிட்டனர். ஆனால், சீட் யாருக்கு தரப்படும் என்பதில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாகி உள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனின் உறவினரும், நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை செயலருமான எஸ்டிடி. ராஜேஷ், வசந்தகுமாரின் மைத்துனர் எம்.எஸ்.காமராஜ், கட்சியின் மாநிலப் பொது செயலாளர் வானுமாமலை.. என ஏகப்பட்ட பேர் போட்டியிட விரும்பினர்.

ஆனால் 3 பேர் இந்த லிஸ்ட்டில் தேர்வானார்கள். அதில், ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர்தான் இறுதி செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர்தான் எப்படியும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திமுகவிடம் சீட் கேட்கும்போது, குமரிஅனந்தனை முன்னிறுத்திதான் தொகுதியை கேட்டதாக சொல்லப்பட்டது.செல்வாக்கு ஆனால், அவருக்கு 80 வயது ஆகிவிட்டதாலும், உடல்நிலை காரணத்தை காட்டியும் சீட் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரையுமே காங்கிரஸ் முன்னிறுத்த காரணம், தேர்தல் செலவை இவர்களே பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையினால்தான். அதனால் இதனை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து, ரூபியை வெற்றி பெற வைப்பதாக வசந்தகுமார், கட்சி மேலிடத்துக்கு வாக்கு தந்திருக்கிறாராம். சீட் வழங்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.